Ashwagandha For Stress: அஸ்வகந்தாவை இப்படி சாப்பிடுங்க. ஸ்ட்ரெஸ் எல்லாம் பறந்து போய்டும்.

  • SHARE
  • FOLLOW
Ashwagandha For Stress: அஸ்வகந்தாவை இப்படி சாப்பிடுங்க. ஸ்ட்ரெஸ் எல்லாம் பறந்து போய்டும்.

Ways To Eat Ashwagandha For Stress Relief: ஆயுர்வேதத்தில் பல நோய்களுக்கு சிகிச்சையளிக்க அஸ்வகந்தா பயன்படுகிறது. இதனை எடுத்துக் கொள்வது கருவுறுதல் மற்றும் பாலியல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. மேலும், இது உடல் தசைகளை வலுப்படுத்துவதுடன், மன ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது. மன அழுத்தம் மற்றும் பதட்டத்தில் இருந்து விடுபட அஸ்வகந்தாவை எடுத்துக் கொள்ளலாம். இது நல்ல தூக்கத்திற்கு வழிவகுக்கவும், மன அழுத்தத்தை நீக்கவும் உதவுகிறது. எனவே, பதட்டம் அல்லது மன அழுத்தம் உள்ளவர்கள் அஸ்வகந்தாவை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

மன அழுத்தத்தைக் குறைப்பதில் அஸ்வகந்தாவின் பங்கு

மன அழுத்தம் மற்றும் பதட்டம் போன்ற மனநலம் தொடர்பான பிரச்சனைகளிலிருந்து விடுபட அஸ்வகந்த பெரிதும் உதவுகிறது. இது உடலில் மன அழுத்தத்தை அதிகரிக்கச் செய்யும் கார்டிசோல் என்ற ஹார்மோனின் அளவைக் குறைக்கிறது. கார்டிசோல் அதிகரிக்கும் போது, மன அழுத்தம் மற்றும் பதட்டம் அதிகமாகலாம். இந்த சூழ்நிலையில் அஸ்வகந்தாவை உட்கொள்வது நன்மை தரும். இது மனதிற்கு அமைதி தருவதுடன், மனச்சோர்வை நீக்குகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Amla With Honey Benefits: வெறும் வயிற்றில் நெல்லிக்காய் உடன் தேன் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் இது தான்

மன அழுத்தத்தைப் போக்க அஸ்வகந்தா சாப்பிடும் முறை

மன அழுத்தம் மற்றும் பதட்டம் உள்ளவர்கள் அஸ்வகந்தாவை கீழ்க்காணும் வழிமுறைகளில் எடுத்துக் கொள்ளலாம்.

தேனுடன் கலந்து

அஸ்வகந்தா மற்றும் தேன் கலந்த கலவை மன அழுத்தத்திலிருந்து விடுபட உதவுகிறது. இதில் அஸ்வகந்தாவை பொடி அல்லது வேராக எடுத்துக் கொள்ளலாம். இதை ஒரு கிளாஸ் தண்ணீரில் கொதிக்க வைத்து பின் வடிகட்டி, அதில் தேன் கலந்து குடிக்கலாம். தினந்தோறும் இதை எடுத்துக் கொள்வது மன அழுத்தத்திலிருந்து விடுபட உதவுகிறது.

அடுத்ததை படிக்கவும்

Child Diabetes Prevention: குழந்தை பருவ சர்க்கரை நோயை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்த செய்ய வேண்டியவை

பொறுப்புத் துறப்பு