பீரியட்ஸ் வலியால் அவதியா? உங்களுக்கான வீட்டு வைத்தியம் இதோ!

  • SHARE
  • FOLLOW
பீரியட்ஸ் வலியால் அவதியா? உங்களுக்கான வீட்டு வைத்தியம் இதோ!

Home Remedies To Reduce Period Pain: பொதுவாக பெண்கள் மாதவிடாய் குறித்து பயப்படுவார்கள்! அந்த நேரத்தில் வலி, இரத்தப்போக்கு, எரிச்சல் மற்றும் பிற பிரச்சனைகளால் அவர்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். சிலருக்கு கடுமையான வலி ஏற்படும். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். அவர்களால் எந்த வேலையும் சரியாக செய்ய முடியாமல் போகும். ஆனால் இவற்றில் இருந்து நிவாரணம் பெற வீட்டு வைத்தியம் உங்களுக்கு உதவும். உங்களுக்கான சில வீட்டு வைத்தியம் இங்கே. 

8 மணி நேரம் இத பண்ணுங்க!

மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு எட்டு மணி நேர தூக்கம் அவசியம். மாதவிடாயின் போது குறைவாக தூங்குவது அதிக வலியை ஏற்படுத்தும். எட்டு மணிநேரம் தூங்குவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

இதையும் படிங்க: Periods Pain Relief Tips: இயற்கையான முறையில் மாதவிடாய் வலியை எவ்வாறு குறைப்பது?

இந்த உணவை சாப்பிடாதீர்!

மாதவிடாய் காலங்களில், நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும். மாதவிடாய் காலங்களில் அதிக நார்ச்சத்து உட்கொள்வது வீக்கத்தை அதிகரிக்கும். இதனால் மாதவிடாய் காலத்தில் அதிக நார்ச்சத்து சாப்பிடாமல் இருப்பது நல்லது. 

எவ்வளவு தண்ணீர் குடிக்கனும் தெரியுமா?

மாதவிடாய் காலத்தில் ஒரு நாளைக்கு 8-10 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும். குறைந்த அளவு தண்ணீரை உட்கொள்வதால் சிறுநீர் கழிக்கும் போது அதிக எரிச்சல் மற்றும் தலைவலி ஏற்படும். நீரிழப்பு காரணமாக நீங்கள் சோர்வாக இருப்பீர்கள். எனவே நீங்கள் தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.

இத கட்டுப்படுத்தியே ஆகனும்!

மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு மன அழுத்தம் ஏற்படுவது நல்லதல்ல. நீங்கள் மன அழுத்தத்தில் இருந்தால், அதிலிருந்து வெளியேற யோகா மற்றும் தியானம் செய்யவும்.

மேற்கூறிய இந்த குறிப்புகளை வீட்டிலேயே நீங்கள் செய்து வந்தால், மாதவிடாய் நேரத்தில் வலியை கட்டுப்படுத்த முடியும். இதற்காக நீங்கள் மருந்து மாத்திரை எடுக்க தேவை இல்லை.

Image Source: Freepik

அடுத்ததை படிக்கவும்

Child Diabetes Prevention: குழந்தை பருவ சர்க்கரை நோயை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்த செய்ய வேண்டியவை

பொறுப்புத் துறப்பு

குறிச்சொற்கள்