மன அழுத்தத்தை குறைக்க இந்த ஆசனங்களை முயற்சிக்கவும்!

By Ishvarya Gurumurthy G
16 Nov 2023

அன்றாட வாழ்வில் ஏற்படும் மன அழுத்தத்தை குறைக்க வழி தேடுகிறீர்களா? அப்போ இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள யோகா ஆசனங்கள் இங்கே.

கருடாசனம்

கை மற்றும் கால்களை இணைத்து பின்னிக் கொண்டு நிற்கும் இந்த கருடாசனம், உங்களின் மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.

உத்தனாசனம்

இந்த ஆசனம் உங்கள் நரம்பியல் நிலைகளை சீர் செய்து, இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. மேலும் இது மன அழுத்தத்தை குறைக்கிறது.

பாலாசனம்

கால்களை உட்புறமாக மடக்கி, தலையை தரையில் படுமாறு வைத்து, கைகளை முன்பக்கம் நீட்டி இந்த ஆசனத்தை செய்ய வேண்டும். இது இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதுடன், உங்கள் மன அழுத்தத்தை நீக்கும்.

வஜ்ராசனம்

காலகளை மடக்கி வைத்து நெஞ்சை நிமிர்த்தி அமர்ந்துக்கொள்ள வேண்டும். இது நரம்பியல் நிலைகளை சீராக்கி மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.